மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை  மாவட்ட  ஆட்சியர் வேண்டுகோள்


வால்பாறை சுற்றியுள்ள ஆறு  மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி  எடுப்பது குளிப்பதை தவிர்த்திட வேண்டும்  



 கோவை  மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு  மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் செல்பி (Selfie) எடுப்பது மற்றும் குளிப்பது போன்றவற்றை தவிர்த்திட வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட  மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளதாவது:
கோவை  மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 20.10.2023 அன்று ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டனர். எனவே, ஆபத்தான ஆறு  மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் குளிப்பது, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் (Selfie) எடுப்பதை குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருப்பதினால், பல நேரங்களில் நீர்நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி, கருமலை எரச்சை பாறை, கூலங்கல் ஆறு, சோலையார் வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனார் நீர்வீழ்ச்சி, காதம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையார் அணை முன்பக்க ஆறு,  சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர்ஃபால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர்வீழ்ச்சி, மனோம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், இந்த ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும் மற்றும் சுழல்கள் நிறைந்த பகுதியாக  உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,  தெரிவித்துள்ளார்.  
மேலும், இந்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ள நல்லகாத்து ஆறு மற்றும் கூழாங்கல் ஆறு ஆகிய இடங்களை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  நேரில் பார்வையிட்டார். மேலும், வால்பாறை வட்டம் சுற்றுலா இடமாக விளங்கும் நல்லகாத்து ஆறு மற்றும் கூழாங்கல் ஆறு ஆகியவற்றில் ஏற்படும் சுற்றுலாப் பயணிகளின் ஆபத்துகளை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்" பணிகள் துறை, வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வு கூட்டத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் பிருந்தா வால்பாறை நகராட்சித் தலைவர் அழகு சுந்தரவள்ளி, துணைத் தலைவர் செந்தில்குமார், வால்பாறை வட்டாட்சியர் திருமுருகன் உட்பட காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்" பணிகள் துறை, வருவாய் துறை கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்