மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறையில் தண்ணீரில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவர்களின் உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு 




பொள்ளாச்சி:-அக்-21 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து  உள்ள  வால்பாறைக்கு சுற்றுலா செல்லவதற்காக கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு   பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிளில்  சென்றனர் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் இருந்து 4கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முடீஸ் செல்லும் வழியில் சோலையாறு சுங்கம் ஆற்றில் உற்சாக குளியல்  போட்டனர். அப்போது வினித் என்ற மாணவர் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடினான். அவரை காப்பாற்ற சென்ற  அஜய்குமார், தனுஷ்   சரத் மற்றும் நபில் ஆகியோரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர் உடன் சென்ற நண்பர்கள் மற்றும் அருகில் இருந்த தேயிலை தோட்ட பணியாளர்கள் காப்பாற்ற முயன்றனர் ஆனால் அவர்களால் முடியாததால் 5 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டது 
இதில் வினித்,தனுஷ் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த 5 பேரின் ஊடல்கள் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக கொண்டு கொண்டுவரப்பட்டது.  3 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது இந்த சம்பவம் இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்