மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் சார்பில் APJ.அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு இக்பால் தலைமை வகித்தார் வழக்கறிஞர் பஞ்சலிங்கம் துணைத் தலைவர் தினேஷ் பாபு முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு 26 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்M.K. சாந்தலிங்கம், 20 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் டேஸ்டி பாலு, 15 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் MAV.துரைபாய், 27 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் S.விஜய காயத்ரி, திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் மேற்கு மண்டல தலைவர் அதிரடி காளிதாஸ், துணைச் செயலாளர் மூர்த்தி, இணை செயலாளர் வெள்ளியங்கிரி, லயன்ஸ் கிளப் கமலக்கண்ணன், ரோட்டரி கிளப் கிரீசன், அருட்செல்வர் மாணவர் மன்றம் சூரியகுமார், லயன்ஸ் கிளப் கனகராஜ், மனோன்மணி, பொள்ளாச்சி ரோட்ராக்ட் கிரீன் கிளப் தர்ஷினி, நம்ம பொள்ளாச்சி செல்வ மணிகண்டன், கவர் கடை ராஜு, மோகன்ராம், பொள்ளாச்சி செஸ் கிளப் பரமேஸ்வரன்,
அறக்கட்டளையின் மாநில நிர்வாகிகள் ராஜா(எ)சிவலிங்கம், செந்தில், இளைஞரணி தலைவர் ரிஷாத், அப்பாஸ், மனோஜ் குமார், ஜெயப்பிரகாஷ், வினோத்குமார், பத்திரிக்கையாளர் மூர்த்தி, கௌரவத் தலைவர் கேசவ் வித்யாலயா பள்ளி முதல்வர் பிரகாஷ், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment