மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் நடைபாதை கடைகள் அகற்றம்
பொள்ளாச்சியில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்க நடை பாதையை ஆக்கிரத்து இருந்த கடைகள் தள்ளுவண்டிகள் அகற்றப்பட்டது
எதிர்வரும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருவதால் பொதுமக்கள் புத்தாடைகள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிக அளவில் வந்து செல்வார்கள் எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் பொள்ளாச்சி நெடுஞ்சாலை துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் முதல் கட்டமாக பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து வெங்கட்ரமணன் வீதி ராஜா மில் ரோடு பேருந்து நிலையம் நகராட்சி அலுவலகம் வரை நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் தள்ளுவண்டிகளை நெடுஞ்சாலை துறை பணியாளர்களை கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அகற்றினர் மேலும் ஒரு வார காலத்திற்குள் நகரப்பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment