மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரியில் 
தனியார் வேலை வாய்ப்பு முகாம் 




கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரியில்  தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
பயன்பெறும் வகையில் இரண்டாவது சிறப்புத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (14ம் தேதி) பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது. இதுகுறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா கூறுகையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இரண்டாவது முறையாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் பொள்ளாச்சி பி.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பற்ற மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குனர் ஜோதிமணி கூறுகையில்,  இம்முகாமில் 8ம் வகுப்பு முதல் அனைத்து கல்வித் தகுதியுள்ள இளைஞர்களும் பங்கேற்கலாம். 
இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்
அமைந்துள்ள வேலையளிப்போர் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட
இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் கலந்து கொள்ள உள்ளனர்.  இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நகராட்சி தலைவர்சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு பொள்ளாச்சி நகராட்சி சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உள்ள பவர் டிஸ்ப்ளே மற்றும் ஒலிபெருக்கி மூலம் நகரம் முழுவதிலும் முகாம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர்  தெரிவித்தார்.
பி.ஏ. பொறியியல் கல்லூரியின் தலைவர் அப்புகுட்டி கூறுகையில்,  கோவை, திருப்பூர், உடுமலை, மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கின்றன. ஆகவே அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு வசதியாக காலையில் முகாமில் கலந்து கொள்வதற்கும், முகாம் முடிந்து மாலை வீடு திரும்பவும் கல்லூரி பேருந்துகளை இலவசமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அதே போல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து முகாம் நடைபெறும் கல்லூரி வளாகம் வரையிலும் கல்லூரி பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம். இளைஞர்கள் இந்த முகாமினை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வருத்த தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்