மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி கள்ளச் சந்தையில்  விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 512 மது பாட்டில் பறிமுதல் 
5 பேர் கைது.         



பொள்ளாச்சி:-அக்-02 கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி 
ஏ எஸ் பி பிருந்தா தலைமையில் போலீசார் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் பான் மசாலா,கஞ்சா,போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர், இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால்  கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டும் தீவிரமாக கண்காணித்து வந்தனர் இந்நிலையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு ரகசிய தகவல் வந்ததின்  அடிப்படையில் போலீசார் லாரி பேட்டை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்ய ஆட்டோவில் மது பாட்டில் ஏற்றும்பொழுது கமலேஷ்,பாக்கியராஜ்,ஆட்டோ ஓட்டுனர் மனோகரன் எனமூன்று பேரை போலீசார் பிடித்தனர்,இதேபோல் இருசக்கர வாகனத்தில் ஏடிஎஸ்சி தியேட்டர் அருகே உள்ள மதுபான கடையில் கார்த்திக்,அருண்குமார் 82 பாட்டில்கள் வாங்கிக்கொண்டு செல்லும்போது போலீசார் பிடித்தனர், இவர்களிடமிருந்து 512 மது பாட்டில்கள் ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டும் மேற்க்கு காவல் நிலைய போலீசார் ஐந்து பேரை விசாரித்து வருகின்றனர் ,
ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறும் பொழுது காந்தி ஜெயந்தி முன்னிட்டு போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்