மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சூலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம்
கோவை சூலூரில் ரூ15.5 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராகடன் தள்ளுபடிகளை கண்டித்தும், அதானி- அம்பானி- பிஜேபி மோடி அரசின் கூட்டு கொள்ளையை கண்டித்தும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை எதிர்த்தும், இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2கோடி வேலை வழங்காமல் ஏமாற்றி நடுத்தெருவில் அழையவிட்ட ஒன்றிய பிஜேபி மோடி அரசுக்கு எதிராக, நாடு தழுவிய மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக சூலூர் தாலுக்கா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருகூர் ரயில் நிலையம் முன்பாக ரயில் மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் தோழர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. தாலுக்கா செயலாளர் சந்திரன், தாலுக்கா குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, சண்முகம், ரவிந்திரன், ஜோதிபாசு, சுப்பிரமணியம், இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின், ராஜேஸ்வரி சண்முகம், சூலூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கைதாகினார்கள்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment