மக்கள் வெளிச்சம் நாளிதழ்
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் நேர்வுகளில் சிலைகள் நிறுவுவதற்கு கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து 09.08.2018 நாளிட்ட பொது (சட்டம்(ம)ஒழுங்கு-B) துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின் படி தொடர்புடைய துறைகளில் பெறப்படவேண்டிய ஆட்சேபணையின்மை கடிதத்துடன், மாநகர பகுதிகளில் அந்தந்த உதவி காவல் ஆணையர்களிடமும், ஊரக பகுதிகளில் அந்தந்த சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர்களிடமும் படிவம் 1-ல் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்ற பின்னர் சிலைகள் நிறுவப்பட வேண்டும்.
மேலும் நிறுவப்படும் சிலைகள் களிமண்ணால் ஆனதாகவும், இயற்கை வண்ணக் கலவை கொண்டு வண்ணம் பூசப்பட்டவைகள் மட்டும் இருந்திட வேண்டும். எனவே, விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் பொதுமக்கள்/அமைப்பினர்கள் உரிய படிவத்தினை தொடர்புடைய காவல் உதவி ஆணையர் அலுவலகங்கள், மற்றும் ஊரக பகுதிகளில் அந்தந்த சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும், பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று சிலைகள் நிறுவிட வேண்டும்.
சிலைகள் வைத்து வழிபட அளிக்கப்படும் விண்ணப்பம் சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர்/ உதவி காவல் ஆணையர்களால் நிராகரிப்பு செய்யப்படும் நேர்வுகளில் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை முறையே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர், கோவை மாநகரம் அவர்களிடம் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பொதுமக்கள்/ அமைப்புகளால் நிறுவப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் கீழ்கண்ட இடங்களில் விசர்ஜனம் செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. முத்தண்ணன்குளம்
2. பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர்
கோவில் மற்றும் தேக்கம்பட்டி).
3. அம்பராம்பாளையம் ஆறு
4. நொய்யல் ஆறு
5. உப்பாறு
6. நடுமலை ஆறு
7. ஆனைமலை முக்கோணம் ஆறு
8. பழத்தோட்டம், சிறுமுகை
9. சாடிவயல்
10. வாளையார் அணை
11. ஆத்துப்பாறை, ஆழியாறு
12. குறிச்சி குளம்
13. குனியமுத்தூர் குளம்
14. சிங்காநல்லூர் குளத்தேரி
15. வெள்ளக்கிணறு குளம்.
எனவே மேற்கண்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும், மேலும் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பொருட்டு எடுத்துச்செல்லுமாறும் பொதுமக்கள்/ அமைப்புகள் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
Post a Comment