மக்கள் வெளிச்சம் நாளிதழ்

உதயநிதியின் தலைக்கு பத்து கோடி அறிவித்த சாமியாரின் உருவப்படத்தை எரித்து திமுகவினர்  ஆர்ப்பாட்டம் 




கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது சனாதான தர்மத்தை ஒழிப்போம் என கூறியதற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹிந்து மத துறவி பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் உதயநிதியின் படத்தை கூர்மையான வாளால் வெட்டி தீயிட்டு கொளுத்தினார் மேலும் உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அறிவித்தார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இதற்கு கண்டனம் தெரிவித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே திமுகவினர் உத்தரபிரதேச துறவியின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்