மக்கள் வெளிச்சம் நாளிதழ்

 மாணவர்களுக்கு விண்வெளி துறையில் அதிக வாய்ப்புகள் 

 டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு



 கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு உறுப்பினராக ஐ எஸ் ஆர் ஓ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் கற்பகம் பல்கலைக்கழகச் சேர்மன் டாக்டர் ஆர் வசந்தகுமார் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் வெங்கடாசலபதி டாக்டர் பழனிவேல் டீன் டாக்டர் அமுதா டாக்டர் தமிழரசி ஐயா கலந்து கொண்டனர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஐஎஸ்ஆர்ஓ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேசியதாவது இன்று இளைஞர்கள் மாணவர்கள் உலக அளவில் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க பொறியியல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் கடந்த காலங்களில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட்டது போல் வரும் காலங்களில் விண்வெளி புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது அதில் இன்றைய பொறியியல் மாணவர்கள் நாளைய விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும் அதற்கு கல்வியில் சிறந்து விளங்கி தங்களது தரத்தை உயர்த்திக் கொள்ள கம்ப்யூட்டர் கல்வியும் உதவியாக கற்றுக் கொள்ள வேண்டும் கடந்த காலங்களில் எங்களை போல இன்று அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற விஞ்ஞானிகள் என்று அழைக்கும் அளவுக்கு உயர்வு காரணம் கடுமையான உழைப்பு மட்டுமல்ல அதை சார்ந்து தொடர் முயற்சியும் வெற்றியை தேடித் தந்துள்ளது எங்களுக்கு முகவரி தந்தது இந்த கல்வி பொறியியல் அந்த பொறியியல் கல்வியை இன்றைய மாணவர்கள் அதிக அளவில் கற்றுத் தேர்வு அதில் உயர்நிலை அடைய மேற்கத்திய நாடுகளில் வேலை வாய்ப்புகள்  அதிகளவு கிடைக்கிறது அதேபோல் இந்தியாவில் சந்திராயன் ஒன்னு வெற்றிக்கு பின் உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கிறது காரணம் சந்திரனின் நாம் மற்றவர்களைப் போல் அல்லாமல் தொடர் முயற்சியில் தென் துருவத்தில் இறங்கி அதில் ஆய்வு மேற்கொண்டு நீர் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம் அதேபோல் அங்கிருந்து எடுத்து வரப்படும் கனிம வளங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய ஊக்க சக்தியாக அமையும் வரும் காலம் குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள விண்வெளி மையம் உலகிலேயே சிறந்த மையமாக அமைய இருக்கிறது காரணம் இனி வரும் காலங்களில் விண்வெளி புரட்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது இதனால் தினம் தினம் சேர்க்கை கோள்கள் அனுப்பும் நிலை ஏற்படும் எனவே இன்றைய மாணவர்கள் பொறியியல் துறையில் சிறந்து கற்று விஞ்ஞானிகளாக மாறவும் பொறியியல் மட்டுமல்லாமல் மற்ற துறையிலிருந்து சிறப்பாக கேள்வியை கற்று சிறந்த மேன்மை அடைய இந்த மேடையில் இப்போது கலந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களை போல் நாளை நீங்கள் விஞ்ஞானிகளாக உருவாகி சிறந்த சாதனைகள் செய்ய வேண்டும் கற்பகம் கல்லூரியில் படிக்கும் நீங்கள் கற்பக விருட்சமாக வளர வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு கலந்து கொண்ட கனவு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது சந்திராயன் நிலவில் இறங்கி சாதனை படைத்தது என்பது மிகப் பெரிய சாதனையாக இருந்தாலும் மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் தென் துருவ பகுதியில் இறங்கி அங்குள்ள கனிம வளங்களை கண்டறிந்து நீர் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு இன்று சந்திராயன் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது அதற்கு நாம் பல்வேறு சோதனைகளை கடந்து தான் இந்த வெற்றியை சாதிக்க முடிகிறது பருவநிலை மாற்றம் மற்றும் பூமியில் பல்வேறு நிலைகளை கண்டறிய ஆதித்யாவும் வெற்றிகரமாக சூரியன் நோக்கி செலுத்தப்பட்டுள்ளது இந்த வெற்றிகள் இந்தியாவை விண்வெளி துறையில் மிகப்பெரிய உயரத்தை அடைய வைத்துள்ளது நாளைய பொழுது மாணவர்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது மேற்குத் தீய நாடுகளில் குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் வயதில் மூத்தவர்கள் தான் அதிக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது எனவே இத்துறையில் மாணவர்கள் சிறந்து விளங்கி உலக அளவில் தமிழரின் பெருமையும் இந்தியாவின் வளர்ச்சியையும் மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும் நாம் கடந்த காலங்களில் ராஜராஜ சோழன் கல்லணை கட்டினால் இன்று பழைய பெருமைகளை பேசுவதை விட நாளை விண்வெளி துறையில் மிகப் பெரிய சாதனைகளை மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும் தன்னைத்தானே அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் கல்லூரியில் அர்த்தம் மட்டும் பெற்றால் பத்தாது விண்வெளி சார்ந்த படிப்புகளை துல்லியமாக படித்து அதனுடன் கணினி பயிற்சி பெற்று விண்வெளியில் குறிப்பாக சந்திரனின் விண்வெளி மையம் அமைக்க நாம் முயற்சிக்க வேண்டும் இந்த முயற்சியில் நாம் மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் ஒன்றிணைத்து முயற்சித்தால் பொருளாதார அளவில் அனைவருடன் பங்குடன் விண்வெளி மையத்தை அமைத்தால் பூமிக்கு இன்னும் பல நன்மைகள் செய்திட முடியும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்திற்கும் விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்திட வேண்டும் இதனால் வருங்காலத்தில் விண்வெளி துறை மட்டுமல்லாமல் விவசாயமும் பெரும் வெற்றி பெறும் புரட்சி ஏற்படும் விண்வெளி துறையில் புரட்சி ஏற்படுத்தியது போல் வாசிங்டனுக்கு இந்தியாவிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் செல்லும் அளவிற்கு விமான சேவைகளும் புரட்சி ஏற்படுத்த முடியும் எனவே மாணவர்கள் தங்களது கல்வியை சிறந்த முறையில் கற்று இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் உலக அளவில் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும் என்று கூறினார். இறுதியாக டாக்டர் தெய்வநாயகி  அனைவருக்கும்
நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்