மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில்    ரூ.4.24 கோடி மதிப்பீட்டில்  4 வளர்ச்சித்திட்டப் பணிகள் 

 அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
 

 கோவை  மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் புதியதாக தார்சாலை அமைத்தல், தார்சாலை புதுப்பித்தல், நவீன எல்.பி.ஜி எரிவாயு தகனமேடை கட்டும் பணிகளை  தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, சாய்ராம் நகரில்‌ அமைக்கப்பட்டுள்ள சிறுவர்‌ பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திருப்பூர் மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பத்மநாபன், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி மன்ற தலைவர் அகத்தூர் சாமி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவராகநாத்சிங், பொள்ளாச்சி  வட்டாட்சியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி வட்டம் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, காளிபாளையத்தில், கலைஞர்‌ நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 99 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்- 15 காளிபாளையம் தெரு, பழனி கவுண்டர் தெரு, சுப்ப கவுண்டர் பிரதான சாலை, குறுக்கு தெருக்கள் மற்றும் வார்டு எண்- 1 ராமசாமி காலனி சாலை வார்டு எண்-2 ராம்நகர் வார்டு எண்-3 ராம்நகர் ஆகிய பகுதிகளில் தார் அமைக்கும் பணிக்கும், மூலதன மான்ய நிதி உதவித்திட்டத்தின் கீழ் ரூ.61.30 இலட்சம் மதிப்பீட்டில் அண்ணாநகர் முதல் 7-வது குறுக்கு சாலைகள் மற்றும் ரயில்வே கோட்ரஸ் சாலை  ஆகிய பகுதிகளில் தார் அமைக்கும் பணிக்கும், ஊத்துக்குளி பேரூராட்சியில் நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.79.60 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்- 1 கிழக்குத் தோட்ட சாலை பெங்களூர் சாலை முதல் பாலக்காடு சாலை வரை தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கும், கலைஞர்‌ நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் நவீன எல்.பி.ஜி எரிவாயு தகனமேடை கட்டும் பணிக்கும், என மொத்தம் ரூ.4.24 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு  தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி வார்டு எண்- 4 சாய்ராம் நகரில்‌ 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்‌ பூங்காவை  அமைச்சர்  திறந்து வைத்து பார்வையிட்டார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்