மக்கள் வெளிச்சம் நாளிதழ்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உடுமலையில் கொடியேற்று விழா
உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் யு எஸ் எஸ் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல்
தலைமையில் நடைபெற்றது .
சேது மாதவன் வரவேற்புரை ஆற்றினார்
கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார்
ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கிருத்துவ சமூக நீதிப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் கிப்டன் டேவிட் பால்,அரசு போக்குவரத்துக் கழகம் (எல் எல் எஃப் )மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி,இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர்
சையது இப்ராஹிம்
உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment