மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பொள்ளாச்சியில் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் சார் ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் பொள்ளாச்சி காவலர் சமுதாய கூடத்தில், நடைபெறுகிறது. இம்முகாமில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெறவும், ஏற்கெனவே தேசிய அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் தேவையான உதவிகள் பெறவும் 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை சார் ஆட்சியர் தலைமையில் காவலர் சமுதாய கூடம், பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அசல் மற்றும் நகலுடன், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID) அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இதுவரை அடையாள அட்டை பெறாதவாகள் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேசிய அடையாள அட்டை பெற ஆதார் அசல் மற்றும் நகலுடன், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ -4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நடத்தப்படும் இம் முகாமில் தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment