மக்கள் வெளிச்சம் நாளிதழ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம்...



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் த.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மைய மாநில துணைச் செயலாளர் விடுதலைமணி, கிருத்துவ சமூக நீதிப் பேரவையின் மாநில துணை செயலாளர் கிப்டன் ,
எல் .எல் .எப் அரசு போக்குவரத்து கழக மாநில துணைத்தலைவர் சிடிசி சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட மடத்துக்குள்ள சட்டமன்றத் தொகுதி உடுமலை சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கிய பகுதிகளாகும் ஒவ்வொரு நிர்வாகிகளும் தனக்கான ஒதுக்கப்பட்ட வேலைகளை திறன் பட செயலாற்ற வேண்டும்.
புதிய முகாம்களை கட்டமைக்க வேண்டும் பழைய முகாம்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தர வேண்டும் அதிக பெண்களை கட்சியில் இணைக்க வேண்டும் ஜனநாயக சக்திகளை கட்சியில் இணைக்க நிர்வாகிகள் களப்பணி ஆற்ற வேண்டும் போன்றவை வலியுறுத்தபட்டது.
இந்த கூட்டத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன் வரவேற்புரையாற்றினார் 
சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன்
மண்டல துணைச் செயலாளர்கள் ஜல்லிபட்டி முருகன் ,ஜாபர் அலி
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன் குமார்,
கிருத்துவ சமூக நீதிப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இமானுவேல் அருண்குமார்,
இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சையது இப்ராஹிம்,
துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாவட்ட அமைப்பாளர் வாளவாடி முருகேசன் ,
முன்னாள் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சக்தி, 
ஒன்றிய செயலாளர்கள்
உடுமலை தம்பி மகாலிங்கம், குடிமங்கலம் முத்துச்சாமி மடத்துக்குளம் சிட்டிபாபு, உடுமலை நகர பொறுப்பாளர் சக்திவேல் ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்