மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறையில் தமிழக ஆளுநர் ஆர். எம் ரவி. பதவி நீக்க கோரி கையெழுத்து முகாம்.


கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று தமிழக ஆளுநர் ஆர் .எம் ரவி .பதவி நீக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று மறுமலர்ச்சி திமுக சார்பில் கையெழுத்துக்கள் பதிவுகள் நடைபெற்று வருகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு வைகோ எம்பி. ஆணையின்படி முதன்மைச் செயலாளர் துறை வைகோ ஆலோசனையின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில். அறிவுறுத்தலின் படியும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர அவைத்தலைவர் ஏ.டி செல்வின். முன்னிலையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் வால்பாறை காந்தி சிலை முன்பு நடைபெற்றது. இதில் நகர கழகத்தின் செயலாளர் .எஸ் கல்யாணி. தலைமையில் கோவை புறநகர் மாவட்ட துணை செயலாளர் எம். முருகன் அன்பழகன் மற்றும் கோவை புறநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் வால்பாறை சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் கே பெருமாள். மற்றும் நகர கழக துணைச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியம். எஸ் கண்ணகி நகர இளைஞரணி செயலாளர் திருஞானம் இளைஞர் அணி துணைச் செயலாளர் சாமிநாதன். முருகன். அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
           நிருபர் வால்பாறை ஐயப்பன் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்