மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் 2.750 கிராம் கஞ்சா பறிமுதல் மூன்று பேர் கைது
பொள்ளாச்சி தாலுகா காவல் ஆய்வாளர் லோகேஸ்வரி தலைமையில் போலீசார் பொள்ளாச்சி கோவை ரோட்டில் ரோந்து பணியில் சென்ற போது வடக்கிபாளையம் பிரிவு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக கூறியவர்களிடம் சோதனையிட்ட போது அவர்களிடம் 2.750 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பந்தலூர் வலவாசல் தேவலா பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் கார்த்திக்(20), திருவாரூர் குடவாசல் வெள்ளகுடி பகுதியை சேர்ந்த மகேசா மகன் அரவிந்த் குமார்(28), வெள்ளிநாதன் மகன் தர்மேந்திரன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment