மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20-ல்
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா
தமிழகத்தின் புதுத் தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது. கோவை, கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய இருநாட்கள் “தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா" நிகழ்வினை நடத்துகின்றது.
புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற இந்த மாபெரும் விழாவில் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும், முதலீட்டாளர் - சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள். தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக விழாப் பேருரையாற்றுகிறார். வீட்டு வசதித்துறை அமைச்சர் க.முத்துசாமி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் தலைமையுரையாற்றுகிறார். தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் T.R.B.ராஜா சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்களோடு அரசு உயர் அலுவலர்களும் கலந்துகொண்டு தொழில் முனைவுக்கான அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து அதுகுறித்து விளக்கமளிக்க உள்ளனர்.
கருத்தரங்கத்தில் பங்கேற்க 1500க்கும்மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். கண்காட்சியினை பார்வையிட 10000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில், தொழில்முனைவோர்கள் - முதலீட்டாளர்கள், தொழில் முனைவு. வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரை அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு புத்தொழி புத்தாக்க இயக்கம் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள செய்யப்பட்டுள்ளது.
"மாபெரும் தொழில் கனவு" என்னும் கருத்துருவோடு தமிழ்நாடு அரசால், முதல்முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கென பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும் என தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின், இயக்க இயக்குனர் தேலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை நடத்தும் இத்திருவிழாவில் தொழில்முனைவோர்கள், ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment