மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை வ.உ.சி மைதானத்தில் 77-வது சுதந்திர தின விழா
ஏற்றி வண்ண பலூன்கள் பறக்க விட்டார்
கோவை:-ஆக-15 கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காலை 9.05 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் கே.பவானீஸ்வரி மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் காவல்துறை துணை தலைவர் ஏ.சரவணசுந்தர் மாநகர காவல் துணை ஆணையர் ஜி.சந்தீஷ் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தசி.பிரியங்கா உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.ஐ.ஆசிக் அலி காவல் உதவி ஆணையர்(ஆயுதப்படை) ஏ.சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) எம்.கோகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 36 மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 73 மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ்களையும், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளிட்ட 153 நபர்கள் என ஆக மொத்தம் 262 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
15 சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள், கு.ந.சுப்ரமணியன், அ.கமருதீன், கா.பழனிசாமி, சி.ரா.செல்வராஜ் ஆகிய 4 மொழிப்போராட்ட தியாகிகள், திருவள்ளுவர் விருது பெற்ற இரணியன் நா.கு.பொன்னுசாமி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
பின்னர், காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் நேரு வித்யலயாபள்ளி, பி.எஸ்.ஆர்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகளும், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கோலாட்டமும், சி.எஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் ஒயிலாட்டமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியும், ஆர்மி டீம் சார்பில் களரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
அதனைத்தொடர்ந்து, சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் மேற்கொண்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
Comments
Post a Comment