மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சுதந்திர தினத்தினை முன்னிட்டு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள
சுதந்திர தினவிழா 2023 -ல் மாவட்ட ஆட்சியர்
கிராந்திகுமார் பாடி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் வருகின்ற (15.08.2023) செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தின விழா 2023-ல் காலை 9.05 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தேசியக் கொடியினை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
அதனைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளார்கள்.
பின்னர், காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் நேரு வித்யலயா பள்ளி, பி.எஸ்.ஆர்.ஜி கலை மற்றும்அறிவியல் கல்லூரி, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 350க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ளும் 10 கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. எனவே, நமது மாவட்டத்தைச் சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Comments
Post a Comment