மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி கார் பைக் மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலி



பொள்ளாச்சி இராமநாதபுரம் பகுதியில் அருப்புக்கோட்டை சூலக்கரையை சேர்ந்த அழகிரி என்பவரின் மகன் கருப்புசாமி (52) சண்முகவேல் என்பவரின் தோட்டத்தில் வேலை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில்(TVS XL SUPER TN 41 T 3880) வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த போது தேனி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் சங்கர்கண்ணன்(41) வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ராயல் என்ஃபீல்டு (TN 22 CM6196) பைக்கில் மேற்கிலிருந்து கிழக்காக வந்த போது கருப்புசாமி மீது வேகமாக மோதியதில் கருப்புசாமி கீழே விழுந்துள்ளார் அதே இடத்தில் அதிவேகமாக  காரில் (TN 37 BT 6745 ALTO K10) வந்த ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல் (27) என்பவர் கீழே விழுந்த  கருப்புசாமி மீது மோதியதில் கருப்புசாமிக்கு இடது மற்றும் வலது காலில் பலத்த காயமடைந்தது அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிகிச்சை பெற்று வந்த கருப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் லோகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்