மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூர் பேரூராட்சி மாதிரி பேரூராட்சியாக பேரூராட்சி இயக்குனரகம் அறிவிப்பு

கோவை;-ஜூலை-04 கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவினை முழுமையாக கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்துவருவதையொட்டி பேரூராட்சிகள் இயக்குநரகத்தால் மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மீதமுள்ள பேரூராட்சிகளிலும்  திடக்கழிவினை முழுமையாக கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்திட பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டதையொட்டி இன்று 04.07.2023 முதற்கட்டமாக ஆனைமலை, கோட்டூர், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி, பெரியநெகமம், ஜமீன் ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம் பேரூராட்சியின் தூய்மை மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 
இதில், பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.தேவி மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் திரு.அ. சதீஷ் குமார், பேரூராட்சி தலைமை எழுத்தர் பா. கோவிந்தராஜா, சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
                    நிருபர் சூலூர் சேகர் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்