மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் போலீஸ் எனக்கூறி செல்போன் பறிப்பு







மூவர் கைது 22 செல்போன் மீட்பு 

பொள்ளாச்சியில் போலீஸ் என கூறி பொதுமக்களிடம் பல இடங்களில் செல்போன் பறித்து வந்த இருவர் மீது கோவை மாவட்ட போலீசார் தக்க நடவடிக்கை.                               கோவை மாவட்டம் கிணத்துக்கடவு  தாமரக்குளத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவரிடம் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபு மற்றும் சிவகுமார் ஆகிய இருவரும் தங்களை போலீஸ் என்று கூறி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர் என  சிவ பிரசாத் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்.                      உத்தரவின் பேரில் பொள்ளாச்சி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிருந்தா I P S  மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி  தலைமையில் தனிப்படை அமைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணி                    பரமசிவம்.                    அபிபுல்லா             கார்த்திகேயன் சக்தி வேல் மற்றும் காவலர்கள் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்  பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை அருகே சந்தேகத்திற்கு இடமான இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தனிப்படையினர் விசாரிக்க அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கையில் சூளேஸ்வரன்பட்டி காமராஜர் வீதியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் சிவகுமார் (44) ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பிரபு(41) தாங்கள் இருவரும் தான் போலீஸ் என்று கூறி பொதுமக்களிடம் பொள்ளாச்சியில் பல இடங்களில் செல்போன் பறித்துச் சென்றோம் என்பதை ஒப்புக் கொண்டனர் அதன் பின் அவர்கள் பிடுங்கிய செல்போன்களை எங்கு கொடுத்தார்கள் என்பதை தாங்களாக முன்வந்து கூற அவர்கள் கோட்டூர் நாலாம்மூலை  சுங்கத்தில் செல்போன் கடை நடத்தி வரும் கட்டுமரம் கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் அருண் பிரசாத் (29)  என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக கூறியதன் பேரில் அருண் பிரசாத் இடம் இருந்து பல இடங்களில் இருந்து பறித்துச் சென்ற 22 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு மேற்கண்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்