மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை தொண்டாமுத்தூரில் மரம் நடும் விழா              

கோவை:-ஜூலை-04 கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொண்டாமுத்தூர் கிளை நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது தொண்டாமுத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சுப்பு. தர்மன் தலைமையற்றார். பொறுப்பு நூலகர் ஸ்டெல்லா மேரி  அனைவரையும் வரவேற்றார்.
       திமுக வடக்கு மாவட்ட செயலாளர் . டி. ஏ.  ரவி . பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் . கமலம் ரவி  இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர்.
       விழாவில் பேரூராட்சி மன்ற துணை பெருந்தலைவர் மு.ப. நடராஜ், முன்னாள் துணை தலைவர் டி.என்.சேகர், கவுன்சிலர் டி. எம். தியாகு, ரோட்டரி சங்க கோவை மாவட்ட துணை ஆளுநர்  டி.  குமார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்  எஸ். ஷைனி சிவகுமார், சாந்தி, பேரூராட்சி மேற்பார்வையாளர் அய்யாசாமி, தொண்டாமுத்தூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  ஜி. மாணிக்கம்மாள், எஸ்.ஆர்.மீராபாய் ஆசிரியர், வி.ராஜாமணி, பூவாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தனர்.
                     நிருபர் சூலூர் சேகர் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்