மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை
பொள்ளாச்சி:-ஜூலை-17 பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்த பவித்ரா(25) என்பவருக்கும் சரவணகுமார் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
மேற்படி இருவரும் எஸ்.சந்திராபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
சரவணகுமாருக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது இவர் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சின்ன சின்ன பிரச்சினை ஏற்பட்டு பவித்ராவின் பெற்றோர் நேரில் வந்து சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3:30 மணியளவில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது கணவர் சரவணகுமார் இங்கு இருந்தால்
பிரச்சனை அதிகமாகும் என்று சரவணகுமார் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு பிறகு வந்து பார்த்தபோது
பவித்ரா தனக்குத்தானே தூக்கமாட்டி இறந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர்
லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Comments
Post a Comment