திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் சுவாமி தரிசனம் செய்தார்
மாக்கினாம்பட்டி ஐயப்பன் கோயிலில் 16ம் ஆண்டு மண்டல பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற 16ம் ஆண்டு மண்டல பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ஸ்ரீ செல்வகணபதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ ஓம் சக்தி ஒட்டாலம்மன், ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 16ம் ஆண்டு மண்டல பூஜை விழா விமர்சையாக நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு கணபதி ஹோமம், கோ பூஜை, ஆராட்டு, ஐயப்பனுக்கு 108 கலச பூஜை, சிறப்பு ஐயப்பன் அபிஷேக பூஜை ஒட்டாலம்மன், ஸ்ரீ கன்னிமூல கணபதி பூஜை, திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் பஜனை பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பெரிய விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், சிறப்பு அபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றன. உடுமலை ரோடு கருப்பராயன் கோயிலில் இருந்து ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த மண்டல பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகிகள...
கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் பொள்ளாச்சி வெங்கடேச காலனி அப்பர் வீதியில் உள்ள வாசன் ஐ கேர் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த 23 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை நடைபெற்று செப் 27ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த கண் பரிசோதனை முகாமில் ஓய்வு பெற்ற காவலர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். ஆண்டுதோறும் இந்த கண் சிகிச்சை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண் சிகிச்சை முகாம் ஓய்வு பெற்ற காவலர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் கௌரவத் தலைவர் S.P.காசிவிஸ்வநாத், தலைவர் செல்வராஜ், செயலாளர் பாலன், பொருளாளர் U.V நடராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. வாசன் ஐ கேர் மருத்துவமனை முதன்மை மருத்துவர் தர்மலிங்கம், கண் நரம்பியல் நிபுணர் அனுஷாவெங்கட்ராமன், மருத்து...
அதிமுக கோட்டையை தகர்த்த தவெக விக்னேஷ். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி அஇஅதிமுக வின் கோட்டையாக இருந்து வந்தது நடந்த 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் செ.தாமோதரன் திமுக சார்பில் சபரி கார்த்திகேயன் தவெக சார்பில் தவெக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ், நாதக சார்பில் பானுப்பிரியா ஆகியோர் போட்டியிட்டனர் கிணத்துக்கடவு தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் இதில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 349 வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலிருந்து தவெக வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலையிலேயே தொடர்ந்து வந்தார் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் விக்னங 99 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்று 11 ஆயிரத்து 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் 88 ஆயிரத்து 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் 67 ஆயிரத்து 789 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்றார் கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுத...
Comments
Post a Comment