மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை பேரூர் ஆதீனம் தமிழ் கல்லூரியில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்.                 



கோவை:-மே18 கோவை பேரூர்  ஆதீனம் தமிழ் கல்லூரியில் உலக சிவனடியார்கள் திரு கூட்டத்தின் குழந்தைகளுக்கான சைவ சமய மேடை அரங்கேற்றம் நிகழ்ச்சி நடந்தது தமிழகத்திலிருந்து 500 குழந்தைகள் கலந்து கொண்டு திருமுறைப் போட்டி,, ஓவியப்போட்டி,,சிலம்ப விளையாட்டு அரங்கேற்றம், பரதநாட்டிய போட்டி,  திருவேட போட்டி, கைலாய வாத்திய இசை அரங்கேற்றம் ஆகியவை மேடையில் அரங்கேற்றப்பட்டு உலக நாடுகள் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்பு செய்யப்பட்டது  பேரூர் ஆதீனம் ஐயா . விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார். 14ஆம் தேதி ஞாயிறு காலை குழந்தைகளுக்கு   விருதுகளும், சான்றிதழ்களும் மேலும் கோவை மாவட்ட சிவனடியார்களுக்கான அடையாள அட்டையும் முன்னாள் சிலை தடுப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் ஐயா விருதுகளையும் பரிசுகளையும் அடையாள அட்டைகளையும் அடியார்களுக்கும்  அடியார் வீட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து சிறப்பு செய்து எழுச்சி உரை ஆற்றினார். சைவ பெருவிழா  மாநிலதலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ .ஈஸ்வரன் அய்யா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்க அய்யா . முன்னிலையில்  மிகச் சிறப்பான முறையில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் அல்லி ராஜா ஐயா  மற்றும் மாவட்ட தலைமை இணை ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் சிவ . நாகராஜா மற்றும் சமூக சேவை செந்தில்குமார் ஐயா, சிவ. தாமரைச்செல்வி அம்மா சிவ புவனேஸ்வரி அம்மா மேலும் கோவை கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர்கள் புடை சூழ சனிக்கிழமை மிகச் சிறப்பான முறையில்  2000 அடியார்களுக்கும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2500 அடியார்களுக்கும் முறையான சாப்பாட்டு வசதிகளும் தங்குமிடமும்  செய்து  கொடுத்து கோவை மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்  மிகச் சிறப்பாக சைவ எழுச்சி பெருவிழாவை   நடத்தியது. சமூக ஆர்வலர்கள் நூறு பேர்கள் தாமாக முன்வந்து   பணிகளை செய்தார்கள்.
                      நிருபர் சூலூர் சேகர் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்