மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் ரூ.170.23 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 

அமைச்சர் கே.என்.நேரு  பொது மக்களுக்கு அர்ப்பணித்தார்.

பொள்ளாச்சி:-மே-08 கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.170.23 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.  
இவ்விழாவில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,  சிவ தாஸ் மீனா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா பேரூராட்சிகள் துறை இயக்குநர் கிரண்குராலா மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம்,  பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி.பிரியங்கா பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்,  நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் மரு.என்.இளங்கோவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் அ.செந்தில்குமார், நிர்வாக பொறியாளர் கே.செல்வராஜ்,  நகராட்சிஆணையாளர் ந.ஸ்ரீதேவி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில்  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு  பேசியதாவது,
தமிழக முதல்வர் கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்தவகையில், பொள்ளாச்சி நகராட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் ரூ9.46கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது, ரூ.22.24 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ரூ.18 கோடி மதிப்பிலான  பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 15-வது மாநில நிதிக்குழுவின் சார்பில்  பொள்ளாச்சி நகராட்சிக்கு 10 எல்.சி.வி வாகனங்கள், ரூ.88.23இலட்சம் மதிப்பிலான எல்.இ.டி தெருவிளக்குகள், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 
இப்பகுதியில் மீன்மார்க்கெட்  தொடங்கப்படவுள்ளது. மேலும், பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.  இப்பகுதியில் உள்ள மாட்டு சந்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 11 எம்எல்டி நீரை சுத்தம் செய்து வெளியேற்ற முடியும். சுத்திகரிக்கப்பட்ட நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.
பொள்ளாச்சி நகராட்சி கோவை மாவட்டத்தில்‌ உள்ள சிறப்புநிலை நகராட்சி ஆகும்‌. இந்த நகரம்‌ 36 வார்டுகளை உள்ளடக்கியது. இந்நகராட்சியின்‌ பரப்பளவு 1387 சதுரகிலோமீட்டர்‌. நகராட்சியின்‌ தற்போதைய, இடைநிலை மற்றும்‌ உச்சகட்ட மக்கட்தொகை முறையே 92,370 (வருடம்‌ 2015), 1,00,360 (வருடம்‌ 2030) மற்றும்‌ 1,08,468 (வருடம் 2045) எனவும்‌ கணக்கிடப்பட்டு இத்திட்டம்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நகராட்சியின்‌ கழிவுநீர்‌ உற்பத்தி தற்போதைய காலத்திற்கு 10.4மில்லியன்லிட்டர்‌, இடைக்காலத்திற்கு 11.04 மில்லியன்லிட்டர்‌ மற்றும்‌ உச்சக்காலத்திற்கு 11.93 மில்லியன்‌ லிட்டர்‌ ஆகும்‌,
பொள்ளாச்சி நகராட்சி 5 மண்டலங்களாகப்‌ பிரிக்கப்பட்டு கழிவுநீர்‌ சேகரிப்பு குழாய்கள்‌ 200 மி.மீமுதல்‌ 600 மி.மீ வரை விட்டமுடைய சுடுமண்‌ மற்றும்‌ கான்கிரீட்‌ குழாய்கள்‌  165கி.மீ நீளம்‌, 7400 எண்ணிக்கையிலான இயந்திரநுழை குழிகள்‌ மற்றும்‌ 20000 எண்ணம்‌ வீட்டிணைப்புகள்‌ அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு 3 கழிவு நீருந்து நிலையங்களும்‌ 18கழிவு நீரேற்று நிலையங்களும்‌ அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீருந்து மற்றும் கழிவு நீரேற்று நிலையங்களில் சேகரிக்கப்படும்‌ கழிவுநீர்‌ 17.195 கி.மீ நீளம்‌, 150 மி.மீ முதல்‌ 400மி.மீவிட்டமுள்ள வார்ப்பு இரும்பு குழாய் மூலம்‌ மாட்டுச்சந்தை அருகில்‌ அமைக்கப்பட்டுள்ள 11.25 எம்.எல்‌.டி திறன்‌ கொண்ட கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்‌, தொடர்‌ தொகுதி உலை தொழில்நுட்பமுறையில்‌அமைக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டைவிட அனைத்து இடங்களிலும் நீர்மட்டம் கூடுதலாக இருக்கிறது. கோடை காலம் முழுவதும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர்  வழங்கப்படும் என நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்