மக்கள் வெளிச்சம் நாளிதழ்

காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை சார்பில் பிரதமருக்கு கண்டன கடிதம் அனுப்பி போராட்டம் 


 பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை சார்பாக பொள்ளாச்சியில்  ராகுல் காந்தி  மீது பொய்யான குற்றங்களை சாட்டி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பை கண்டித்து பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கண்டனக் கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாவட்ட தலைவர் கராத்தே S. பஞ்சலிங்கம் தலைமை தாங்கினார் .முன்னாள் மாவட்ட தலைவர் M.P.சக்திவேல் கண்டனக் கடிதம் அனுப்பும் போராட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் R.கோபாலகிருஷ்ணன். மாவட்ட நிர்வாகிகள் S.ஸ்ரீதர். K.L.C. ராமகிருஷ்ணன் .அட்சய சுப்பிரமணியம். அன்சர் பாய்.வக்கீல் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும்  கட்சி நிர்வாகிகள்,  பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து கடிதங்கள் பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணை தலைவர் ரவி சேகர் மாவட்ட செயலாளர் வெண்ணிலா ரவிக்குமார் ஆனைமலை கிழக்கு வட்டார தலைவர் கிருஷ்ணன் பொள்ளாச்சி வடக்கு வட்டார செயலாளர் பழனிச்சாமி எட்டாவது வார்டு தலைவர் கிருஷ்ணன் .மனோகர். பொதுச் செயலாளர் நடிகர் பொன்முடி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்