மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சீமானை கைது செய்ய வலியுறுத்தி
அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே
அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆவல்.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
மாவட்ட பொருளாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பட்டியலின மக்களை வேறுபடுத்தி பிளவு
உண்டாக்கும் பாசிச சனாதன கருத்துக்களுக்கு ஆதரவாக சீமான் தொடர்ந்து பேசி வருகிறார் அதிலும்
குறிப்பாக அருந்ததியர் சமுதாயத்தை வந்தேரிகள் என்று வாய் கூசாமல் பேசி வருகிறார்.
இது தொடர்பாக அரசு வழக்குப்பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாதது பட்டியலின
மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். இதைக்கண்டித்தும்,
பொள்ளாச்சி புதுத்திட்ட சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் கீழ்
உள்ள கல்வெட்டில் சிலை திறப்பாளர் ஒரு அரிஜன சிறுமி என்று பதிவு செய்திருப்பதை என்பதை மாற்றி, பட்டியிலினச்
சிறுமி என பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து பலமுறை அரசிடம் மனு கொடுத்தும்,
நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பு, அரசு ஊழியர் பிரிவு செயலாளர் மாசிலாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் ராஜ்கண்ணு, மாவட்ட செயலாளர் தேவராஜ்,
மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள்
காளீஸ்வரி, செண்பகம், ஜெகதாம்பிகை உட்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து நிர்வாகிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
Comments
Post a Comment