மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பார் கவுன்சில் தலைவரை அவதூறாக பேசியவர் மீது கோவை காவல் ஆணையரிடம் புகார்
கோவை:-பிப்-02 சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் T.K.சத்தியசீலன் என்பவர் அவர் மீது அதிக வழக்குகள் இருக்கும் காரணத்தால் அவர் மீது தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞராக பணிபுரிய தடை விதித்து உள்ளதால் அதற்கு தனிப்பட்ட முறையில் பார் கவுன்சில் தலைவர் P S அமல்ராஜ் தான் காரணம் என்று கூறியும் தன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு நீதிமன்றம் செல்லாமல் தலைவரை ஒருமையில் கொச்சையாக பேசியும் அவரின் நற்பெயருக்கு களங்கம் வகையில் தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் விதமாக பல்வேறு வாட்சப் குரூப்பில் தொடர்ந்து அவதூறாக பேசி குரல் பதிவிட்டு வருகிறார். மேலும் அகில இந்திய வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் S.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இணை செயலாளர் G. மோகனகிருஷ்ணன், நீதிபதி கிருபாகரன் ஆகியோர் மீது அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பி வருகிறார். என்னைப் போல இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் பார் கவுன்சில் தலைவர் P.S.அமல்ராஜ் , துணைத் தலைவர் S.பிரபாகரன், இணைச் செயலாளர் G.மோகனகிருஷ்ணன், நீதிபதி கிருபாகரன் ஆகியோர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் T.K. சத்தியசீலன் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையரிடம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்குமார் தலைமையில் புகார் மனு அளித்தனர்.
Comments
Post a Comment