மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சூலூர் மாணவன் நிரஞ்சனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
சூலூர் பொங்கல் விழா அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்ற மகேந்திரன் ரேணுகா தம்பதியினரின் மகன் மாஸ்டர் நிரஞ்சனை கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
சூலூர் பொங்கல் விழா 2023-ல் நடை பெற்ற சிறியோர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு(Third Eye) பார்வையற்றோர்கள் நடப்பதற்காக walking stick ஒன்றை உருவாக்கி முதல் பரிசு பெற்றுள்ளார். இந்த உபகரணம் பயன் அறிந்து நிரஞ்சனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தன் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி ஊக்குவித்தோடு அவர் கையெழுத்து போட்ட புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.வளரும் தலைமுறைக்கு ஊக்கம் கொடுக்கும் பொங்கல் விழா தொடர்ந்து வெற்றியை அளிக்கட்டும் என ரேணுகா மகேந்திரன் குடும்பத்தாரும் சூலூர் பொது மக்களும் வாழ்த்தினர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment