மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மாசாணியம்மன் கோவில்
குண்டம் திருவிழா
கொடியேற்றத்துடன் துவக்கம்
பொள்ளாச்சி:-ஜன-22 ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடிமரத்துக்கான மூங்கிலை பக்தர்கள் சர்க்கார்பதியை அடுத்த வனப்பகுதியில் இருந்து பிரத்தியோகமாக வெட்டி எடுத்து வந்தனர். 85 அடி நீளமுள்ள இந்த கொடிமரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று காலை கோவிலுக்கு முன்பாக ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையாளர் ராஜலக்ஷ்மி, எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமலா நவநீதகிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார், தி.மு.க. ஆனைமலை நகர செயலாளர் டாக்டர். செந்தில்குமார், தி.மு.க. மருத்துவரணி மாநில துணைத்தலைவர் டாக்டர். வரதராஜன், வக்கீல் அதிபதி, ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற பிப்ரவரி மாதம் 3ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் மயான பூஜை நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 6ம் தேதி காலை 8 மணிக்கு மேல் துவங்குகிறது.
Comments
Post a Comment