மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா
பொள்ளாச்சியில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
8 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 பிரமாண்ட வெப்ப பலூன்கள் பறக்க விடப்படுகிறது..
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியாருடன் இணைந்து இந்த பலூன் திருவிழாவை முதல்முறையாக தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் நடைபெருகின்றது.
இந்த பலூன் திருவிழாவில் நெதர்லாந்து,அமெரிக்கா,பிரேசில், கனடா உட்பட 8 நாடுகளில் இருந்து 12 வெப்ப பலூன்கள் பறக்க விடப்படுகிறது..
மேலும் இந்த சர்வதேச பலூன் திருவிழாவில் ஹெலிகாப்டரிலும் பறந்து சுற்றி பார்க்க எற்படு செய்யப்பட்டுள்ளது..
சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதலில் ஹெலிகாப்டரில் பறந்து பொள்ளாச்சி பகுதியை சுற்றி பார்த்தார்..
சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் உடன் சுற்றுலாத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் ஆகியோர் பிரத்தேக ஹெலிகாப்டரில் பயணம் செய்யப்பட்டு பொள்ளாச்சி பகுதியில் சுற்றி பார்த்தனர்..
வெப்ப காற்று பலூர்களை இயக்கம் பயலாட்டுகளை சந்தித்து பலூன்கள் இயக்கப்படுவதை குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கேட்டறிந்து பார்வையிட்டனர் .
இந்த பலூன் திருவிழா நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நடைபெற்ற நிகழ்வில் வெப்ப காற்று பலூன்களை இயக்கும் பைலட்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்..
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்..
கடந்தாண்டு மட்டும் 12 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர் உள்நாட்டில் இருந்து 11கோடி பேர் வந்து சென்றுள்ளனர் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டினர் வரவில்லை தற்போது வரத் தொடங்கியுள்ளார்கள் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது சுற்றுலாத்துறைக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்..
பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பலூன் திருவிழாவில் பலூனில் பறப்பதற்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளது தற்போது சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கி தனியார் துறை இணைந்து நடத்தப்பட்டு வருவதால் இது குறித்து பேசி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்..
மேலும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கோமாளிதனமாக பேசுவதாகவும் தேயிலையை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது எனவும் தேயிலை தொழிலின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.. மேலும் நிகழ்ச்சி பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மேலும் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில் இந்த பலூன் திருவிழாவை குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்ததாகவும் இதுவரை தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் மட்டுமே கண்ட காட்சிகளை நேரில் பார்ப்பது பிரம்மிப்பாக இருப்பதாகவும் இந்த பலூன் திருவிழா நாட்களை மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்..
சுமார் 10,000 பேர் இந்த பலூன் திருவிழாவை இன்று காண குவிந்ததால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு பலூனில் பறக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நிருபர் Mist ராஜா
Comments
Post a Comment