மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் 57 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா,கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை தடுக்கும் விதமாக போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர், இதை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பொள்ளாச்சி நகர்புறம் மற்றும் கிராமப்புற கடைகளில் உள்ள குட்கா,பான் மசாலா விற்பனை தடுக்கும் விதமாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததின் அடிப்படையில் மார்க்கெட் ரோடு திருவள்ளுவர் திடல் அருகே உள்ள அழகு சுந்தரம் மொத்த வியாபார கடையில் சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 57 கிலோ விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது,குட்காவை பறிமுதல் செய்த போலீசார் அருள்ராஜ் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நிருபர் Mist ராஜா
Comments
Post a Comment