மக்கள் வெளிச்சம் நாளிதழ்

சூலூரில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி




கோவை;-டிச-01 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு,
சூலூர் பேரூராட்சி, கண்ணம்பாளையம்  RVS நர்சிங் கல்லூரி மற்றும் சூலூர் கிரேட்டர் அரிமா சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது.
  இந்நிகழ்ச்சி சூலூர் பேரூராட்சி தலைவர் திருமதி தேவி மன்னவன் தலைமையில் நடைபெற்றது சுமார் 300 பேர் கலந்து கொண்டு ,
எய்ட்ஸ் விழிப்புணர்வு முழக்கமிட்டனர்.
 முடிவில் சூலூர் பேரூராட்சி தலைவர் கலந்து கொண்ட அனைவருக்கும் சுண்டல் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கினார் .
 மேலும் இந்நிகழ்ச்சியில் சூலூர்  மருத்துவமனை தலைமை அதிகாரி டாக்டர் கஜேந்திரன், RVS முதல்வர் திருமதி லதா,
டைரக்டர் திருமதி சுஜாதா, நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், சூலூர் பேரூராட்சி தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், சூலூர் பேரூராட்சி துணைத் தலைவர் சோலை கணேஷ், கவுன்சிலர்    பசுமை நிழல் சூஆ.விஜயகுமார் , அரிமா டால்பின் மாரிமுத்து மற்றும் சூலூர் கிரேட்டர் அரிமா சங்கத்தின் பொருளாளர் சுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். 
                    நிருபர் சூலூர் சேகர்
    

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்