மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சேவை நாளாக கொண்டாட்டம்

குழந்தைகளுக்கு உபகரணங்கள் அன்னதானம்


கோவை;-டிச-14 சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட டாஸ்மார்க் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சூலூர் பள்ளபாளையத்தில் அமைந்திருக்கின்ற ராமகிருஷ்ணா ஆசிரமக் குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் தளபதி முருகேசன் அன்னதானத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுவாமிநாதன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர். த. மன்னவன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், பள்ளபாளையம் பேரூர் கழக செயலாளர் கபிலன், ஆதி திராவிடர் நலக்குழு மாநில இணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.  டாஸ்மார்க் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார் .  சூலூர் சண்முகம் முன்னிலை வகித்தார். டாஸ்மார்க் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் ,பொருளாளர் கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் ,மாவட்ட துணைத் தலைவர் கருப்புசாமி, கிருஷ்ணகாந்த், மாவட்ட துணைச் செயலாளர் நித்தியானந்தம், வேலுச்சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் பரமேஸ்வரன், பொள்ளாச்சி சங்க தலைவர்  திருமுருகன், செயலாளர் சிவானந்தம், பொருளாளர் ஜானகிராமன், துணைத் தலைவர் பிரபாகரன், துணை செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில்குமார், மற்றும் சூலூர் ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்குமார், லெனின்குமார், கணேஷ் ,மகேந்திரன், சதாசிவம், செல்வராஜ் ,ரமேஷ், எம் ரமேஷ், செயற்குழு உறுப்பினர்கள் நிசார் அகமது, கருப்புசாமி , ராஜசேகர், ஆனந்தன், மணிகண்டன், சந்திரசேகர், ராஜேஷ் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் உபகரணங்களை வழங்கினார் நிகழ்ச்சியில்  ஸ்டாலின் பிறந்த நாளை சேவை நாளாக கொண்டாடினர்.
                  நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்