மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 

 


பொள்ளாச்சி;-நவ-30 கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி, பொள்ளாச்சி வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் (02/12/2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் பொள்ளாச்சி காவலர் சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது. எனவே மேற்படி சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவை பதிவு செய்ய, திருத்தம் செய்ய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சேவைகளை பெற விரும்புவோர் தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வரும்படியும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
                       நிருபர் Mist ராஜா

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்