மக்கள் வெளிச்சம் நாளிதழ்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு தங்க மோதிரம் 





கோவை;-நவ-29 திமுக கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  45 வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில்,

கோவை  மாநகர் மாவட்ட இளைஞரணி மற்றும் பெரியகடைவீதி பகுதி  திமுக இளைஞரணி சார்பாக,
 தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில்,
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27-11-2022 அன்று பிறந்த குழந்தைகளுக்கு
 கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க மோதிரங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களின் தொகுப்பை வழங்கி,வாழ்த்தினார்.
பெரியகடை வீதி பகுதி இளைஞரணி அமைப்பாளர் எஸ். தினேஷ்குமார் வரவேற்பில்
மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கே. பி. திருமலை ராஜா, லாரா  பிரேம்தேவ், அருண், ஆர்.தனபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர்.நிர்மலா
மாநில தீர்மானக்குழு மு. இரா. செல்வராஜ், பெரியகடைவீதி பகுதிச் செயலாளர்கள் வி. ஐ. பதுருதீன்,மார்க்கெட் எம். மனோகரன்,கோவை மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு,
மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், வட்டக்கழகச் செயலாளர்கள் டவுன் ஆனந்த்,விஜயகுமார், ஹைவேஸ் தண்டபாணி, மார்க்கெட் சோமு,சுஜித்குமார்,மார்க்கெட் மூர்த்தி, சபரிகோபால்,
இளைஞரணி பகுதி துணை அமைப்பாளர்கள் பாலாஜி விக்னேஷ்,சங்கர், ரமேஷ் குமார், ஜெயப்பிரகாஷ்,கழக நிர்வாகிகள்,இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
                    நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்