மக்கள் வெளிச்சம் நாளிதழ்
நிலுவைத் தொகையினை செலுத்தி கிரயப்பத்திரம் பெற்று கொள்ளலாம்
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு
கோவை;-நவ-25 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுஉள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு அதனை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள அரசால் அரசாணை (நிலை) எண்.194, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (நி.எ. 2(1)) துறை நாள் 04.11.2022 வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அந்த அரசாணையின் படி கோவை மாவட்டத்தில் செலுத்தப்பட்டுள்ள அண்ணா நகர், கணபதி I, II, III, IV, VI,VII,VIII, XI நிலவங்கி திட்டம் LB 4, LB 11 வீடுகள், தன்னிறைவு வீட்டுமனை திட்டம் பகுதி- 1, 2, 3 மனைகள் காளப்பட்டி பகுதி - 2 (பிருந்தாவன் நகர், நேருநகர், இளங்கோ நகர் வீடுகள்) மற்றும் நிலவங்கி திட்ட மனைகள் தன்னிறைவு வீட்டுமனை திட்ட மனைகள் கோவைப் புதூர், குறிச்சி பகுதி I,II, பெரியநாயக்கன்பாளையம் வீடுகள், நிலவங்கி திட்டம் பகுதி I,II,III மனைகள், பொன்னையா புரம் வீடுகள் சிங்காநல்லூர் (104 வீடுகள்,467 வீடுகள், 168 வீடுகள்)சௌரிபாளையம் பகுதி I,II வீடுகள், டாடாபாத் வீடுகள், உப்பிலிபாளையம் - 960 அ.மா. வீடுகள், 192 வரிசை வீடுகள், 109 வீடுகள், வீரகேரளம் - (வீடுகள் /மனைகள்) வெள்ளக்கிணறு- I,II,III,IV,V ஆகிய திட்டங்களில் மனைகள்/வீடுகள்/அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடியில் அதனை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சலுகை 03.05.2023 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுறது. எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கிரையம் பெற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments
Post a Comment