மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்ட மக்களுக்கு மாவட்டஆட்சியர்
ஜி.எஸ்.சமீரன் அன்பான வேண்டுகோள்.
கோவை;-டிச-01 தமிழக அரசு தரவுகளின் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக குறுகியகால நீண்டகால ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தவகையில் தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறையும் மற்றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள குடும்பங்களில் கல்வி, மருத்துவம், வருமானம், சொத்து தொழில் நிலவரம் வேலைவாய்ப்பு இடம்பெயர்ப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துதொடர் ஆய்வு நடத்த முடிவுசெய்து 2018-19 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 11, 100 குடும்பங்களிடம் அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது செப்டம்பர் 2022 முதல் இரண்டாவது கட்ட ஆய்விற்காக ஏற்கனவே ஆய்வு செய்த 11, 100 குடும்பங்களிலிருந்து ஏதேச்சையாக 837குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுக் குடும்பங்களில் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. வருமானம் தொழில் வேலைவாய்ப்பு உள்கட்டமைப்பு வசதிகள் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றிலும் அவைகளைச் சார்ந்த இதரக் காரணிகளால் ஏற்படும் மாற்றங்களின் தன்மைகளை பகுப்பாய்வு செய்வது இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வில் குடும்ப உறுப்பினர் பட்டியல் தனிநபர் பட்டியல் மற்றும் கிராமப்பட்டியல் என மூன்று பிரிவுகளாக தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது. குடும்ப உறுப்பினர் பட்டியலில் வீட்டில் வசிக்கும் மற்றும் வசிக்காத அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரிப்பதுடன் முழு குடும்பத்தையும் பற்றியதகவல்கள் சேகரிக்கப்படும். தனிநபர் பட்டியலில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தகுதியான நபர்களைக் குறித்த அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். கிராமப்பட்டியலில் கிராம அளவிலுள்ள பொதுவான அடிப்படை வசதிகள் அளவில் இருக்கின்ற பொதுவான அடிப்படை வசதிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். இக்கிராம பொது விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பஞ்சாயத்து உறுப்பினர் அங்கன்வாடி ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியர் மூத்தகுடி மக்கள் போன்றவர்களிடம் இருந்து இத்தகவல்கள் சேகரிக்கப்படும்.
இக் கணக்கெடுப்பு பணியில் தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறையின் பணியாளர்களும் அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாய்வின் நிமித்தம் இத்துறை பணியாளர்களும் அலுவலர்களும் உங்களை அணுகும் போது இவ்வாய்விற்கான விவரங்களை கொடுத்து உதவ அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வழங்கும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும். நாட்டின் எதிர்கால திட்டமிடுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் சரியான விவரங்களை வழங்க கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment