மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மதுக்கரையில் பிஜேபி யிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
கோவை;-நவ-24 பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மண்டல பொதுச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மதுக்கரையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் .குறிச்சி பிரபாகரன் மதுக்கரை நகர கழக செயலாளர் ராம்ஜி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான்நாசர், முன்னாள் நகராட்சி தலைவர் சாலம்பாஷா, முன்னாள் பேரூக் கழக செயலாளர் கேபிள் பாலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சல்மான்கான், மகளிர் அணி அமைப்பாளர் .மதுக்கரை கமலம், உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment