மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பசும்பொன் தேசிய கழகம் சார்பில் முப்பெரும் விழா




கோவை;-டிச-01 பசும்பொன் தேசிய கழகம் சார்பில் முப்பெரும் விழா சூலூர் அண்ணா சீரணி கலையரங்கத்தில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் 115 வது ஜெயந்தி விழா, 221 வது மருது விழா ,1037 வது ராஜராஜசோழன் சதய விழா ஆகிய முப்பெரும்விழா பசும்பொன் தேசியக் கழகத்தின் சார்பில் மாநிலத் தலைவர் நா. ஜோதி முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அரிமா எம்.முருகேஷ்தேவர், மாவட்ட அமைப்பு செயலாளர் பூஜா செல்வம், மாவட்ட பொருளாளர் அரிமா குமார்தேவர், சூலூர் நகர செயலாளர் ஹோண்டா ரமேஷ்தேவர் ,சூலூர் நகர தலைவர் பூமாலை தேவர், சூலூர் நகர பொருளாளர் பிரபு தேவர் விழா வரவேற்பாளர்களாகவும் மாவட்டத் துணைத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் தேவர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் அரிமா கார்த்திகேயன் தேவர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ராஜாத்தேவர் மாவட்ட இளைஞரணி தலைவர் அரிமா சரவணன்தேவர் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது  முத்துஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணகுமார், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், ஸ்ரீ சாய்ஏஜென்சிஸ் உரிமையாளர் புதுரார்எஸ். கே. தங்கவேலு, சமூக ஆர்வலர் பி டி ஆர் சுப்பிரமணியன் எஸ்.பி.எஸ். தண்டபாணி, RSA மெட்டல்ஸ் ராஜ்குமார், தொழிலதிபர் நன்மாறன் ஆகியோர் விழாவினை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .சிறப்பு பேச்சாளர் டாக்டர் சண்முக பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை ,பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு சீருடை, கல்வி உதவி, மருத்துவ உதவி, சமூக பணியாற்றி வருபவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற்சங்கம் ,ஐ டி விங், மாணவரணி, ஒன்றிய கழக நிர்வாகிகள், காளிராஜ் ,ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள், பசும்பொன் தேசியக் கழக மாவட்ட செயலாளர்கள், குரும்பபாளையம் கழக நிர்வாகிகள் ,சூலூர் நகர கழக நிர்வாகிகள் ,சூலூர் தேவர் பேரவை, கோவை மாவட்ட தேவர் பேரவை, பள்ளபாளையம் நேதாஜி நண்பர்கள் நற்பணி இயக்கம் ,தேவர் பேரவை ராசி பாளையம், இருகூர் தேவர் பேரவை, உடையாம்பாளையம் மருது பாண்டியர் தேவர் சிலை அமைப்பாளர்கள், பட்டணம் புதூர் தேவர் பேரவை, குறிச்சி தேவர் பேரவை, மற்றும் அனைத்து முக்குலத்தோர் அமைப்புகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
                   நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்