மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலக்சங்க பொதுக்கூட்டம்
கோவை;-டிச-01 தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க பொதுக்கூட்டம்
சூலூர் S R S திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் நடேசன் தலைமையில் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன் முன்னிலை வகித்தார் பொதுக்கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவராக K.சசிகுமார் மாவட்ட செயலாளராக
A V ஜெயக்குமார் மாவட்ட பொருளாளராக M G சரவணகுமார் மற்றும் அவை தலைவராக
M வெள்ளியங்கிரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் பொதுச் செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மாநிலபொருளாளர் குமார் வாழ்த்துரையாற்றினார் நன்றி உரையை மாவட்ட துணைச் செயலாளர்
S M சதீஸ்குமார் தெரிவித்தார்.
சிறப்பு நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment