மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்கள்
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு
கோவை;-நவ-29 மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபரகணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கு கோவை மாவட்டத்தில் மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான உதவி உபரகணங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ நிறுவத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான மடக்குக் குச்சி, கைதாங்கி, முழங்கை தாங்கி, சி.பி. சேர், பேட்டரியினால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் செயற்கை கால், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு எம்.எஸ்.ஐ.டி. கிட் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (ஏடிஎல் கிட்) போன்ற உதவி உபரகணங்கள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு கோவை மாவட்டத்தில் பின்வருமாறு மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற உள்ளது.
முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்
முகாம் நடைபெறும் இடங்கள்:
வ.எண் நாள் ஊர் இடம்
1 28.11.2022 மருதமலை Leprosy colony - Marudamalai
2 29.11.2022 கோயம்புத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாப்புதூர் (Sidhapudur Govt.Hr.Sec.school (Boys)
3 30.11.2022 அன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
4 01.12.2022 பேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
5 06.12.2022 பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
இம்முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், மற்றும் வருமான சான்று ஆகியவற்றுடன் இந்த மதீப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment