மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைகிராம மக்கள்  காத்திருப்பு போராட்டம்.






பொள்ளாச்சி;-நவ-29ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள வால்பாறை, ஆனைமலை தாலுக்காவில் உள்ள 18 மலை கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர், சாலைவசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி 100க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வால்பாறை மற்றும் ஆனைமலை தாலுக்காவில் சின்னாற்பதி, பந்தக்காலம்மன்பதி, புழியங்கண்டி, மன்னம், எருமைபாறை, உள்ளிட்ட 18 மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் பல தலைமுறைகளாக வனத்தில் பூர்வீகமாக வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி இல்லை என்பது வேதனை. பல வருடங்களாக இந்த மலைகிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தியும் எவ்வித பயனும் இல்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா வருபவர்களுக்கு உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பிடம் போன்ற அனைத்து வசதிகளையும் வனத்துறை செய்து கொடுக்கிறது, ஆனால் வன வனத்திலேயே பல தலைமுறைகளாக வாழ்த்து வரும் மலை கிராம மக்கள் இன்னும் புறவெளியில் மலம் கழிப்பது வேதனை அளிக்கிறது என்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு குழு என்ற ஒன்றை அமைத்து அதன் மூலம் வசூல் செய்யப்படும் பணத்தை வனத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் மலை வாழ் மக்களை ஏமாற்றி  வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்மேலும் பல வருடங்களுக்கு முன்பு அரசு இந்த மக்களுக்கு கட்டி கொடுத்த வீடுகள் சேதம் அடைந்துள்ளது உடனே அதை புனரமைத்து தர வேண்டும் என்றும் ஒவ்வொரு மலை கிராமத்திர்க்கும் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் இங்குள்ள மக்களுக்கு நலவாரிய அட்டை, அனைத்து மலைவாழ் மக்களுக்கும் சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என இவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மலைவாழ் மக்கள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா உடனான பேச்சு வார்த்தையின் முடிவில்., இன்னும் மூன்று மாத கால இடைவெளியில் மலைவாழ் மக்களின் கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என்று சார் ஆட்சியர் பிரியங்கா தெரிவித்ததன்  அடிப்படையில் கோஷங்கள் இட்டவாரு அனைத்து மக்களும் கலைந்து சென்றனர். மேலும் அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் எங்கள் போராட்டங்கள் திசை மாறும் என்று போராட்ட காரர்கள் தெரிவித்தனர்
 
போராட்டத்தில்
பரமசிவம்  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட தலைவர். பத்மநாபன் - மா.கம்யூ. கட்சியின் கோவை மாவட்ட செயலாளர்
 மற்றும் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்
                        நிருபர் Mist ராஜா

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்