மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை;-நவ-26 பசுமை நிழல் ஆசிரியர் சுந்தர்ராசு எழுதிய பொங்கல் திருவிழா நூலினை சூலூர் பாவேந்தர்பேரவை, சூலூர் பொங்கல்விழா
இணைந்து வெளியிடும் நிகழ்வு சூலூரில் நடைபெற்றது. கோயமுத்தூர் சரவணம்பட்டி கௌமார மரபு தண்டபாணி சுவாமிகள் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் நூலினை வெளியிட நூலினை அரிமா சங்கங்களின் அறக்கட்டளை தலைவர் மன்னவன், 324 சி அரிமா மாவட்டத்தின் ஆளுநர் ராம்குமார், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் அரிமா பி.எஸ். செல்வராஜ் ,சூலூர் பேரூராட்சி துணைத்தலைவர் ப. கணேஷ் ,சமூக ஆர்வலர் இனிதாகுமார் பெற்றுக்கொண்டனர்.நூலின் சிறப்பு படிகளை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, பள்ளபாளையம் தோப்பு க .சாமிநாதன், தோப்பு அசோகன் பிரதிகளைப்பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் நிகழ்ச்சிக்கு தலைமை சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், பசுமை நிழல் விஜயகுமார் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சொல்லேருவன் செல்லமுத்து ,சூலூர் கலைப்பித்தன், புலவர் செந்தலை கௌதமன் புத்தகம் குறித்த கருத்துக்களை விளக்க உரை ஆற்றினார். நூல் ஆசிரியர் சுந்தரராசு ஏற்புரைஆற்ற கி.ம. கனகராஜன் நன்றி உரையாற்னார்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment