மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சூலூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் நலவாரியம் பதிவு செய்யும் முகாம்
கோவை;-நவ-25 கோவை மாவட்டம் சூலூரில் தேசிய நலவாரிய திட்டங்கள் பதிவு செய்யும் முகாம் சாலையோர வணிகம் செய்பவர்கள், தினக்கூலிகள், கைவண்டி இலுப்பவர்கள், இருசக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிலாளர்கள், தச்சு பணியாளர்கள், கட்டிடப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் இதர தொழில் செய்பவர்க்கான தொழிலாளர் நல வாரிய பதிவு முகாம் சூலூர் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது தொழிலாளர்கள் அதிக அளவில் வருகை தந்து நல வாரியத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு அதற்குண்டான பதிவு அட்டை நகல்களை பெற்றுச் சென்றனர் . நலவாரியத்தில் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள சூலூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தொண்டறிக்கை வாயிலாகவும் செய்திகள் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இதனால் பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் வருகை தந்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் சூலூர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சூலூர் டி. ஆர். சந்திரசேகரன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ரவீந்திரன், பொருளாளர் சுப்ரமணியம், செயலாளர்கள் உமரி கணேஷ், முருகேசன், முத்துசாமி, துணைத் தலைவர்கள் தங்கராஜ், இளங்கோவன், செல்வராஜ் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முகம் ஒருங்கிணைப்பாளர்களாக வாரிய அலுவலர்கள் பெலிக்ஸ், செந்தில், வாசுதேவன் சி.எஸ்.சி சென்டர் பணியாளர்கள் முகாமினை சிறப்புடன் நடத்தினர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment