மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி
கோவை;-நவ-24 சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கான நேரடி உள்ளுறை பயிற்சி முத்து கவுண்டன்புதூர் சிரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் 19 மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அங்கு பல்வேறு விதமான இயந்திரங்களை எவ்வாறு இயக்குவது அதில் செய்யப்படும் வேலைகள் கம்ப்யூட்டர் நியூ மெரிக்கல் கண்ட்ரோல் மெஷின் பெண்டிங் மெஷின் லேசர் கட்டிங் மெஷின் துளையிடும் இயந்திரம் ஜிக்ஸ் & பிக்சர்ஸ் வெல்டிங் வகைகள் நுண்ணுக்குமான கைக்கருவிகளை கையாளுதல் போன்ற வேலைகளை திறம்பட கற்றுக் கொண்டனர். தொழிற்சாலையில் அனைத்து பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், மற்றும் மேல் அதிகாரிகள் அனைவரும் நண்பர்களாக பழகி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் சொல்கிறார்கள் மேலும் ஐந்து நாட்கள் பயிற்சியில் ஒரு வருடம் படிப்பதற்கு உண்டான அனுபவம் எங்களுக்கு இந்த சிரா இன்ஜினியரிங் பிரைவேட் கம்பெனியில் கிடைத்தது அதற்காக பள்ளியின் சார்பிலும் தொழிற்கல்வி மாணவர்கள் சார்பிலும் ஆசிரியர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என மிகவும் சந்தோஷமாக தொழிற்கல்வி மாணவர்கள் பதில் அளித்தனர் ஆசிரியர்கள் தங்கவேல் பாலமுருகன் ஆகியோர் எங்களின் கூடவே இருந்து பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர் இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான ஏற்பாட்டினை தொழிற்கல்வி ஆசிரியர் கதிர்வேல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர்கள் கூறும்போது கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு தலைமையாசிரியர் சார்பிலும் மற்றும் ஆசிரியர்கள் சார்பிலும் பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் மேலும் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment