மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் 30-11-2022-ம் தேதி  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 




கோவை;-நவ-24 கோவை மாவட்டத்தில் விவசாயிகளின்  பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நவம்பர் 2022 -ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்  ஜி.எஸ்.சமீரன் தலைமையில் 30/11/2022 புதன்கிழமை அன்று நேரடியாக நடத்தப்பட உள்ளது. 

     இதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள தரைத் தள கூட்ட அரங்கில் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த உள்ளார்.

    கோவை மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடை முறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்