மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் கடன் பெற்றுத் தருவதாக 9 லட்சம் மோசடி...?
பாதிக்கப்பட்ட பெண்கள் சார் ஆட்சியரிடம் புகார்
பொள்ளாச்சி;-நவ-21பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனியார் நிதி நிறுவன வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி கோட்டூரைச் சேர்ந்த கிஷோர் என்பவர் ஒவ்வொரு பெண்கள் பெயரிலும் பெற்ற கடன் தொகையில் சிறு தொகையை கொடுத்து விட்டு சுமார் 9 லட்சம் அளவில் மோசடி செய்துள்ளார். தற்போது வங்கி நிர்வாகம் கடன் பெற்ற பெண்களிடம் கடன் தொகையை வசூல் செய்ய சென்ற போது தான் தங்களை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது அதிர்ச்சியடைந்த பெண்கள் இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்ற காவல்துறையினர் மனுவிற்கு புகார் ரசீது வழங்கி அனுப்பியுள்ளனர் அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
Comments
Post a Comment